திரும்புற பக்கமெல்லாம் ‘கேட்’ போடுறாங்களே… ராகுல்காந்திக்கு செக்… லலித் மோடி பரபர ட்வீட்!

திரும்புற பக்கமெல்லாம் ‘கேட்’ போடுறாங்களே… ராகுல்காந்திக்கு செக்… லலித் மோடி பரபர ட்வீட்!

Share it if you like it

தன்னை ஊழல் மற்றும் பண மோசடியுடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக ராகுல் காந்தி மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக லலித் மோடி தெரிவித்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய ராகுல் காந்தி, திருடர்களான லலித் மோடி, நிரவ் மோடி, நரேந்திர மோடி ஆகியோருக்கு மோடி என்கிற பொதுவான பெயர் இருப்பது எப்படி என்று விமர்சித்திருந்தார். இது தொடர்பாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம். இதனால், எம்.பி. பதவியையும் இழந்திருக்கிறார் ராகுல்.

இந்த நிலையில்தான், ராகுல் காந்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக லலித் மோடி தெரிவித்திருக்கிறார். ஐ.பி.எல். சேர்மனாக இருந்தவர் லலித் மோடி. இத்தொடரில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, 2010-ம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, லண்டனில் தஞ்சம் புகுந்தார். இவர், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ராகுல் தான் ஒரு முழு முட்டாள் என அறிந்து கொள்வதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். ராகுல் காந்தி என்னை ‘நீதிக்கு பயந்து தப்பியோடியதாக’ எந்த அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

நான் எந்தக் குற்றத்திலும் தண்டனை பெற்றதில்லை. 100 பில்லியன் டாலர்களை ஈட்டும் உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வான ஐ.பி.எல். தொடரை உருவாக்கி இருக்கிறேன். காந்தி குடும்பத்தைவிட எனது குடும்பம் இந்தியாவிற்கு அதிகம் நன்மை செய்திருக்கிறது. ராகுல் காந்தி என் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என்று சவால் விடுகிறேன். ராகுலை நீதிமன்றத்தில் சந்திக்கக் காத்திருக்கிறேன். காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களது சொத்துக்களின் முகவரி மற்றும் போட்டோக்களை என்னால் தரமுடியும். அவதூறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினால்தான் இந்தியா திரும்புவேன். எனினும், லலித் மோடியின் ட்வீட் குறித்து ராகுல் காந்தி இதுவரை பதிலளிக்கவில்லை.

திரும்பு பக்கமெல்லாம் கேட் போடுறாங்களே!


Share it if you like it