சாவர்க்கரை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் ராகுல் காந்தி, தனது தந்தையைக் கொன்ற பேரறிவாளனை ஸ்டாலின் கட்டித் தழுவியபோது ஏன் கண்டிக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பி இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி சமூகத்தைப் பற்றி ராகுல் காந்தி அவதூறாகப் பேசினார். இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால், எம்.பி. பதவியை இழந்தார் ராகுல். எனினும், மன்னிப்புக் கேட்டால் விடுவிப்பதாக நீதிமன்றம் கூறிய நிலையில், மறுத்துவிட்டதால்தான் ராகுலுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பிறகும், மோடி சமூகத்தைப் பற்றி பேசியதற்காக ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்புக் கேட்ட வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி வந்தது.
இந்த சூழலில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல், மன்னிப்புக் கேட்பதற்கு எனது பெயர் ஒன்றும் சாவர்க்கர் இல்லை, ராகுல் காந்தி என்று திமிராக பதில் சொல்லி இருந்தார். சாவர்க்கர் பற்றி ராகுல் பேசியது மகாராஷ்டிரா மாநிலம் மற்றுமின்றி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, எதிர்க்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் சாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் காந்திக்கு எச்சரிக்கை விடுத்தனர். , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும்கூட, சாவர்க்கர் பற்றி பேசினால் மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று ராகுல் காந்திக்கு அட்வைஸ் செய்தார். இதன் பிறகு, சாவர்க்கர் பற்றி பேசுவதை கைவிட காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது.
இந்த சூழலில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளரும், கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான மணி, சாவர்க்கர் பற்றி பேசிய ராகுல், ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சாவர்க்கர் என்பவர் உண்மையிலேயே சிறையில் கொடுமையான சிரமங்களை அனுபவித்தவர். அவரைப் பற்றி பேசுவதால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்புதான் ஏற்படும். ராகுல் காந்தியின் தந்தையை கொலை செய்த பேரறிவாளன் விடுதலையானபோது, அவரை கட்டித் தழுவி வரவேற்றவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். சாவர்க்கர் பற்றி பேசும் ராகுல், தனது தந்தையை கட்டித் தழுவியவரை கண்டிக்க தைரியம் இருக்கிறதா?
தேர்தல் வெற்றிபெறுவதற்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? ராகுலுக்கு எதைப் பேச வேண்டும். எதை பேசக் கூடாது என்பது குறித்த அறிவு சுத்தமாக இல்லை என்று கடுமையாக சாடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் ராகுலின் முதிர்வுத்தன்மை இல்லாதது பற்றி குற்றம்சாட்டி வருகின்றனர். அதேசமயம், பத்திரிகையாளர் மணியின் கருத்தை ஆமோதித்து வருகின்றனர்.