காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலம் பாலிகஞ்சில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு, பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்திக்கு காந்தி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து நடைப்பெற்ற பொது கூட்ட மேடையில் நின்று மக்களை பார்த்து கை அசைத்து கொண்டிருந்த போது திடீரென அவர்கள் நின்று கொண்டிருந்த மேடை சரிந்து கீழே விழுந்தது. இதனால் ராகுல் நிலை தடுமாறி கீழே விழும்போது உடனே அருகில் இருந்த மிசா பார்தி கையை பிடித்து கொண்டார். அதிர்ஷ்டவசமாக ராகுலுக்கு எதுவும் ஆகவில்லை.
மேடை உடைந்தபோது காந்தியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் மிசா பாரதியும் ஒருவரையொருவர் கைப்பிடிப்பதைக் காணக்கூடிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ராகுல் காந்திக்கு உதவ முன்வந்தார். வேண்டாமென்று மறுத்தார் ராகுல். அவர் நலமுடன் இருப்பதாகவும், தனது பார்வையாளர்களை நோக்கி தொடர்ந்து கைகளை அசைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை சமூக வலைதளவாசிகள் தேர்தல் முடிவு வருவதற்கு (ஜூன் 4 ) க்கு முன்பே ராகுல் தோற்றுவிட்டார் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம் என்று கிண்டலடித்து வருகின்றனர்.