ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மற்றும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்பு, ஹிந்து ஆலயங்கள் இடிக்கும் காணொகளிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. இப்படியாக, ஹிந்துக்களின் உணர்வுகளை ஆளும் தி.மு.க அரசு தொடர்ந்து புண்படுத்தி வருகிறது. அந்த வகையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சி தற்பொழுது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும், விதமாக இந்தியாவின் மிகப்பெரிய ஹனுமான் கோவிலாக பார்க்கப்படும், ஸ்ரீ சலசர் தாமின் ராம் தர்பார் கோவிலின் நுழைவு வாயிலை, இரவோடு இரவாக புல்டோசரால் இடித்து தள்ளியுள்ளது. இது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதன் லிங்க் இதோ.
பஞ்சாப்பில் தற்பொழுது, ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் பி.டீம் என்றும், காலிஸ்தான் பயங்கரவாதிகளிடம் நிதி பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த நிலையில், பஹலோல்பூர், நொய்டா செக்டார் 63-ல் நடந்த சம்பவம் இங்குள்ள, புகழ் பெற்ற சிவன் கோவிலின், லிங்கத்தை உடைத்து அதன் மீது மாமிசங்களை வீசி மர்ம நபர்கள் வீசி சென்று உள்ளனர். இக்காணொளியும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.