கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.
குறிப்பாக அவர், “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால், பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல’ என பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்.பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி பேசியதன் எதிரொலியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பா.ஜ.க இடையே காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஐந்து காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குஜராத்தில் அவர்களை தோற்கடிக்கப் வேண்டும். நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் தோற்கடிப்போம். அயோத்தியை மையமாக கொண்டு அத்வானி தொடங்கிய இயக்கம், அயோத்தியில் அந்த இயக்கத்தை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது.
நமது அலுவலகத்தை அவர்கள் உடைத்த விதத்தில், நாம் அவர்களின் ஆட்சியை உடைக்கப் போகிறோம். ஆனால், குஜராத் காங்கிரசில் குறைபாடுகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து சரியாக போட்டியிடவில்லை. 2017ஆம் ஆண்டில் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து நல்ல பலன் கிடைத்தது. இப்போது நமக்கு 3 வருடங்கள் உள்ளன, இறுதிக்கட்டத்தை பின்தள்ளுவோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். கட்சித் தலைமை, நான், என் சகோதரி உட்பட அனைவரும் உங்களுடன் நிற்கப் போகிறோம்” எனக் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார். இவ்வாறு அயோத்தி கோவிலை வைத்து ராகுல் பாஜகவையும் மோடியையும் மிகவும் ஆணவமாக விமர்சித்து பேசியுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி என்றால் நம் எல்லோருக்கும் ஸ்ரீ ராமன் மட்டும் தான் ஞாபகம் வருவார். ஆனால் ராகுல் கூற்றுப்படி, இண்டி கூட்டணி ஸ்ரீ ராமனை தோற்கடித்தார்களா? ஆணவமோ, முட்டாள்தனமோ – இது நீண்டநாள் நீடிக்கப்போவதில்லை. தெய்வ நிந்தனை முடிவின் அடையாளம்.
தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் காங்கிரஸுக்கு மக்கள் வரும் தேர்தல்களில் நல்ல பாடத்தினை கற்பிப்பார்கள்.