இந்தியாவில், மத்திய அரசின் ரயில்வே துறை பல்வேறு மாநிலங்களுக்கு தனது சேவையினை வழங்கி வருகிறது. அவற்றில் மிக சிறந்த சேவையை பெற்ற இடமாக மதுரை ரயில்வே கோட்டம் முதலிடம் பெற்றுள்ளது. பயணிகளின் குறைகளை கேட்டு அவற்றை தீர்ப்பதற்கு ரயில் மதாத் என்ற அலைபேசி செயலியை ரயில்வே துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூகுல் பிளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து அந்த செயலியில் புகார்கள் பதிவு செய்யப்பட்ட வுடன், உடனடியாக அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய பதிலை குறுஞ்செய்தி மூலம் புகார் செய்தவர்களுக்கு அனுப்பி விடுவர்.
அவ்வாறு மதுரை கோட்டம் சராசரியாக 31 நிமிடங்களில் தீர்வு கண்டு தெற்கு ரயில்வேயில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக குறை தீர்ப்பு பிரிவு அதிகாரியான கூடுதல் கோட்ட மேலாளர் லலித்குமார் மன்சுகானி, அலுவலர்களுக்கு கோட்டமேலாளர் லெனின் பாராட்டு தெரிவித்தார்.