Share it if you like it
முனைவர் கு.வை.பா அவர்களின் வானிலை அறிக்கை, 17.06.2023, காலை 10:15 மணி
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்தின் கிழக்குத் திசையிலிருந்து மேகங்கள் வந்து மழையைத் தருவது சற்று விநோதமான விஷயம்தான். இன்று, 17.06.2023 காலை முதல் அதுதான் நடக்கிறது. தரைக்காற்று இன்னமும் மேற்கு திசையிலிருந்துதான் வீசுகிறது. இருப்பினும் வட தமிழக ஆந்திரக் கடலோரத்தில் நிலவும் வளிமண்டலக் காற்றின் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தொண்டி முதல் திருவள்ளூர் மாவட்ட கடலோரப் பகுதிகள் வரை மேகமூட்டம் காணப்படுகிறது.
இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று நாள்களிலும் தமிழகக் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பரவலாகவும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Share it if you like it