தஞ்சை பிரகதீசுவரர் கோவில் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமாகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகவும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற சோழ பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.
இந்நிலையில் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1038வது சதய விழா வருகிற 24 ஆம் தேதி தொடங்குகிறது. 25 ஆம் தேதியில் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிது. இதனால் வருகிற 25 ஆம் தேதி தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட கலெக்டர் அளித்துள்ளதார்.