காங்கிரஸ் ஆட்சியில் தலித் சிறுவன் அடித்துக் கொலை!

காங்கிரஸ் ஆட்சியில் தலித் சிறுவன் அடித்துக் கொலை!

Share it if you like it

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பானையில் வைத்திருந்த தண்ணீரை குடித்த பட்டியலின சிறுவனை, ஆசிரியர் ஒருவர் அடித்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சுரானா என்கிற கிராமம். இங்குள்ள தனியார் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் பள்ளி இடைவேளை நேரத்தில் தாகம் எடுக்கவே, பள்ளியில் வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்த நீரை எடுத்து பருகி இருக்கிறான். இதைக் கண்ட பள்ளி ஆசிரியர் சைல் சிங், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நீ, உயர் சமூகத்தினர் குடிக்க வேண்டிய பானை தண்ணீரை குடிக்கிறாயா என்று கூறி, சிறுவனை சரமாரியாக அடித்திருக்கிறார்.

அப்போது, சிறுவனின் காதுப் பகுதியில் ஒரு அடி பலமாக விழுந்திருக்கிறது. இதனால், காது நரம்பு வெடித்து சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்திருக்கிறான். இதுகுறித்து அச்சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அருகிலுள்ள ஜலோர் மாவட்ட மருத்துவமனையில் சிறுவனை சேர்த்திருக்கிறார்கள். பின்னர், மேல் சிகிச்சைக்காக உதய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.

இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதன் பேரில் ஆசிரியர் சைல் சிங் மீது கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த முதன்மைக் கல்வி அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it