ஹிந்து பெண் மீது துப்பாக்கிச் சூடு: ரியாஸ் கான் கைது!

ஹிந்து பெண் மீது துப்பாக்கிச் சூடு: ரியாஸ் கான் கைது!

Share it if you like it

ராஜஸ்தானில் முஸ்லீம் வாலிபரை திருமணம் செய்த ஹிந்து பெண் மீது, கணவரின் குடும்பத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக, கணவரின் உறவினர் ரியாஸ் கான் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் முரளிபுரா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் லத்தீப். இவர், அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி என்கிற ஹிந்து பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இதில், அப்துல் லத்தீப் குடும்பத்தினருக்கு துளியும் விருப்பமில்லை. எனவே, காதல் ஜோடி கடந்த ஓராண்டுக்கு முன்பு கோர்ட் மூலம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் லத்தீப் குடும்பத்தினர், காதல் தம்பதிக்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து அப்துல் லத்தீப் சதர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். ஆனால், வழக்கம்போல போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில், ஒரு ஆயுர்வேத மருந்து நிறுவனத்தில் வேலை பார்க்கும் அஞ்சலி, வழக்கம்போல இன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். காலை சுமார் 10.30 மணியளவில் பல்லவி ஸ்டூடியோ அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இதில், பலத்த காயமடைந்த அஞ்சலி அந்த இடத்திலேயே மயங்கிச் சரிந்தார். உடனே, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அஞ்சலியை மீட்டு, சிகிச்சைக்காக காவடியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சவாய் மான் சிங் (எஸ்.எம்.எஸ்.) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மிகவும் ஆபத்தான நிலையில் அஞ்சலி சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவ பரிசோதனையில் அஞ்சலியின் முதுகில் புல்லட் பாய்ந்திருப்பது தெரியவந்தது. குண்டை அகற்றும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தகவலறிந்த அப்துல் லத்தீப் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலியை பார்த்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்தவர்களில் ரியாஸ் கான் சப்தம் கேட்டதாகவும், அவர் யாரோ ஒருவரிடம் எங்கே சுட வேண்டும் என்று கேட்டதாகவும் அஞ்சலி கூறியதாக அப்துல் லத்தீப் கூறினார். மேலும், இச்சம்பவத்தில் தனது மூத்த சகோதரருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறினார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரியாஸ் கானை கைது செய்தனர். இந்த ஆணவக் கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it