எங்க கட்சி ஜனநாயக அமைப்பு – ராஜீவ் காந்தி பெருமிதம்!

எங்க கட்சி ஜனநாயக அமைப்பு – ராஜீவ் காந்தி பெருமிதம்!

Share it if you like it

தி.மு.க. ஜனநாயக அமைப்பு என தி.மு.க. நிர்வாகியான ராஜீவ் காந்தி தமிழ் சமயத்திற்கு அளித்த பேட்டி பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க.வின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக இருப்பவர் ராஜீவ் காந்தி. இவர், நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அந்த வகையில், தி.மு.க.வையும், பட்டத்து இளவரசர் உதயநிதியையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், சீமான் அளந்து விடும் கப்சா கதைகளை பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து, தி.மு.க.வை சேர்ந்த வெயிட்டான எம்.பி. ஒருவரை சந்தித்தார். அவரின், துணையுன் அக்கட்சியில் இணைந்தார். அதன்பின்பு, தி.மு.க.வின் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பதவி அவரை தேடி வந்தது. இதையடுத்து, அரசு பஸ்களுக்கு பெயிண்ட் அடிக்கும் காண்ட்ராக் பணி அவருக்கு கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இவரின், அசுர வளர்ச்சி அக்கட்சியில் உள்ளவர்களுக்கே பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனினும், தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக, சேப்பாக்க எம்.எல்.ஏ. உதயநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் அளவுக்கு அதிகமாக புகழ்ந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், பிரபல இணையதள ஊடகமான தமிழ் சமயத்திற்கு ராஜீவ் காந்தி அளித்த பேட்டி பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it