2024- 25 ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை கடந்த 23 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற அவையில் பட்ஜெட் மீதான எதிர்கட்சிகளின் விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். அதில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சர்ச்சை கருத்து கூறியிருந்ததாக குறிப்பிட்டார். அந்த கருத்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி ஒன்று தருகிறார். அதில் இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டாள்களுக்கு பதவி உயர்வு அளிக்கக்கூடாது. ஓபிசி மக்களுக்கு இட ஒதுக்கீடு பதவி உயர்வு அளித்தால் தேசம் நாசமாய் போய்விடும் என்றார் ராஜிவ்காந்தி. இவ்வாறு அந்த பேட்டியில் ராஜீவ்காந்தி பேசியிருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் பட்ஜெட்டைத் தயாரித்த அதிகாரிகளில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பாஜக அரசு மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜீவ் காந்தி அறக்கட்டளையில் ஏன் எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவரக்ள் இல்லை என்றும் ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் ஐந்து அறங்காவலர்களில் ஒருவர் கூட ஏன் எஸ்.சி சமூகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் உயத்துகிறதா என்பதை பாருங்கள் என்று கூறினார்.