கையோடு பெயர்ந்து வரும் தார்ச்சாலை… திராவிட மாடல் ஆட்சியில் கொள்ளையோ கொள்ளை… மக்கள் கொதிப்பு!

கையோடு பெயர்ந்து வரும் தார்ச்சாலை… திராவிட மாடல் ஆட்சியில் கொள்ளையோ கொள்ளை… மக்கள் கொதிப்பு!

Share it if you like it

ராமேஸ்வரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார்ச்சாலை கையோடு பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது ஏரகாடு கிராமம். இக்கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும்போது, ஏற்கெனவே இருந்த சாலையை பெயர்த்து எடுக்கவில்லை. தவிர, சாலையில் அடியில் ஜல்லி கற்கள் போடாமல், வெறும் சிப்ஸ் தூளை மட்டும் போட்டு தாரை ஊற்றி சாலை போடப்பட்டிருக்கிறது. இதனால் அந்த சாலை தற்போது பெயர்ந்து வரத்தொடங்கி இருக்கிறது.

கையை வைத்து இழுத்தால் கையோடு சேர்ந்து பெயர்ந்து வருகிறது. மேலும், இரு சக்கர வாகனத்தை நிறுத்தினால், வாகனத்தின் ஸ்டான்ட் மண்ணுக்குள் புதைவது போல் தார்ச்சாலைக்குள் புகுந்து விடுகிறது. அதோடு, கால்நடைகள் சென்றாலும் சாலையில் கால்தடம் பதிந்து விடுகிறது. அந்தளவுக்கு மோசமான சாலை போடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள், பொதுமக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். தவிர, 500 மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்காமல் பாதியில் விட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, இச்சாலையை மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்து சாலை போட்டவர்களையும், சாலைக்கு அனுமதி அளித்தவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு, இனிமேல் இதுபோன்று நடக்காத வண்ணம் தரமான சாலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இல்லைவிட்டால் விரைவில் மக்கள் அனைவரும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.


Share it if you like it