ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல் !

ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல் !

Share it if you like it

மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (வயது 87), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமோஜி ராவின் உடல் இறுதி அஞ்சலிக்காக ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் ராமோஜி ராவின் மறைவிற்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“ராமோஜி ராவ் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய ஊடகத்தில் புரட்சியை ஏற்படுத்திய தொலைநோக்கு பார்வையாளராக இருந்தார். அவரது செழுமையான பங்களிப்புகள் பத்திரிகை மற்றும் திரைப்பட உலகில் அழியாத முத்திரையை பதித்துள்ளன. அவரது குறிப்பிடத்தக்க முயற்சிகள் மூலம், அவர் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உலகில் புதுமை மற்றும் சிறப்பிற்கான புதிய தரங்களை அமைத்தார். ராமோஜி ராவ் இந்தியாவின் வளர்ச்சியில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

அவருடன் பழகுவதற்கும் அவருடைய ஞானத்தால் பலனடைவதற்கும் பல வாய்ப்புகளைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *