தரமான சம்பவம்: வெற்றி மாறனுக்கு பாடம் நடத்திய பாண்டே!

தரமான சம்பவம்: வெற்றி மாறனுக்கு பாடம் நடத்திய பாண்டே!

Share it if you like it

பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே திரைப்பட இயக்குனர் வெற்றிமாறனுக்கு தரமான பாடம் நடத்திய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அசுரன், பொல்லாதவன், ஆடுகளம் என்று பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர் திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன். இவர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறும்பட விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ், வி.சி.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வெற்றிமாறன் பேசும் போது இவ்வாறு கூறினார் ; திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்த விளைவு தான், தமிழ்நாடு இன்று வரை மதசார்பற்ற மாநிலமாக இருந்து வருகிறது. வெளியில் இருந்து வரும் பல சக்திகளின் அதிகாரத்தை இது தடுக்கும் பக்குவம் கொண்ட மாநிலமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மையத்திற்குள் கொண்டு வருவது மிகவும் அவசியம். நடுவில் இடைப்பட்ட காலத்தில் கொஞ்சம் இல்லாமல் இருந்தது. இப்போது, திராவிட சித்தாந்தம் தமிழ் சினிமாவை கையில் எடுத்துள்ளது.

மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை அணிவது ஆகட்டும். ராஜ ராஜ சோழன் ஒரு ஹிந்து அரசனாக காட்ட முயற்சி நடைபெறுகிறது. இது தொடர்ந்து, தமிழ் சினிமாவிலும் காட்ட முயற்சி நடைபெறுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். வெற்றிமாறனின் இந்த பிரிவினை பேச்சு தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனிடையே, வெற்றி மாறனின் சர்வதேச திரைப்பட மற்றும் கலாச்சார நிறுவன அமைப்பின் (ஐஐஎஃப்.சி) சார்பில், தமிழகம் 2024 ; தமிழியியம், திராவிடியியம், தலித்தியம், இந்தியயியம், எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆன்மீக சொற்பொழிவாளர், எனும் பன்முகதன்மை கொண்ட ரங்கராஜ் பாண்டே கலந்து கொண்டார். அப்போது, இந்தியயியம், எனும் தலைப்பில் அவர் பேசும் போது, இந்திய ஒற்றுமை மற்றும் தேசியத்தின் நலன் குறித்து மிக தெளிவாகவும், ஆழமாகவும் பேசியுள்ளார். மேலும், வெற்றி மாறன் போன்றவர்களுக்கு தேச ஒற்றுமை குறித்து எப்படி? சொன்னால் புரியும் என்பதை தனது பாணியில் பாண்டே பேசியுள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற நாள் 4.07. 2022, நேரம் காலை 11 மணி இடம் ஐ.ஐ.எஃப்.சி வேளச்சேரி என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it