ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் : 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் : 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது !

Share it if you like it

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட முதலில் கடந்த 23.04.2024 அன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த பால்பாண்டியன் மகன் சண்முகராஜ் (எ) கட்டத்துரை (26), கயத்தாறு பிரியங்கா நகரை சேர்ந்த ஜோதிராஜா மகன் ராஜா (எ) சண்முகராஜா (22), கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாலமுருகன் மகன் சுடலைமுத்து (எ) சண்டியர் சுடலை (23), கயத்தாறு மருத்துவமனைச் சாலை பகுதியைச் சேர்ந்த முத்துகுட்டி மகன்கள் முத்துகிருஷ்ணன் (எ) சஞ்சய் (23), நரசிம்மன் (21) கடம்பூர் ஓனமாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் கணேஷ்குமார் (22), கடம்பூர் குப்பண்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனபாண்டியன் மகன் சண்முகபாண்டி (23), பழனிகுமார் மகன் அருண்குமார் (எ) அப்பு (22) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 8 பேரையும் குண்டத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தார். இதையடுத்து இவர்கள் 8 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்பி எல்.பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் எட்டு பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்கில் தொடர்புடைய 3 பேர், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் உட்பட மொத்தம் 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எஸ்பி பாலாஜி சரவணன தெரிவித்துள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *