தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று (ஆக.,9) தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் நிதியமைச்சர் கூறியதாவது.
‛தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும், தலா, இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடன் இருப்பதாக’ தெரிவித்திருந்தார்.
அதையடுத்து, நாமக்கல் மாவட்டம், பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த, காந்தியவாதி ரமேஷ் என்பவர், முதல் நபராக, தனது குடும்பத்துக்கான கடன் தொகையை, செக் மூலம் செலுத்துவதற்காக, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று உள்ளார்.
ஆர்.டி.ஓ -வை சந்தித்த காந்தியவாதி, தன்னிடம் வைத்திருந்த, இரண்டு லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய்க்கான வங்கி காசோலையை அளித்து உள்ளார். அந்த செக்கை வாங்க மறுத்த, ஆர்.டி.ஓ., ‘இந்த செக்கை பெறுவதற்கு எனக்கு அதிகாரம் இல்லை; உயர் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஆர்.டி.ஓ தெரிவித்தார் இதனை தொடர்ந்து இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி ; தினமலர்