சில நாட்களுக்கு முன்பு சென்னை ராயப்பேட்டை பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹீரிர் என்ற அமைப்புக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆள் சேகரிப்பில் ஈடுபட்டதாக ஆறு இஸ்லாமிய அடிப்படைவாதிகளை உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப்பட்டது
இந்த நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ஆள் சேகரிப்பில் ஈடுபட்ட அஜீஸ் அகமது என்கிற நபரை என்ஐஏ, பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இவர் பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சேர்த்துள்ளதாகவும், இஸ்லாமிக் கிலாபத் என்கிற கொள்கைகளை தமிழகத்தில் பரப்பி வந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது .