ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் என்பது கிராம காவல் தெய்வம் ஆகும். சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மகனாக இவர் கருதப்படுகிறார். சுடலை ஆண்டவர் வழிபாடு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. தென் மாவட்டங்களில் பரவலாக குல தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சுடலை ஆண்டவர் கிராமத்துக் கடவுளாக இருப்பதால் வழிபாடும் கிராமம் சார்ந்ததாகவே இருக்கிறது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிராமத்தில் அமைந்துள்ள ஒத்தப்பனை சுடலை ஆண்டவரை மிகவும் தரக்குறைவாக பேசி இழிவுபடுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ஹிந்து மக்கள் குலதெய்வமாக வணங்கங்கூடிய காவல் தெய்வத்தை கிறிஸ்துவ மிஷனரிகளான பாளையம்கோட்டையை சேர்ந்த சிஎஸ்ஐ சபை ஊழியர்களை விசுவ ஹிந்து பரிஷத் & பஜ்ரங்தள் மற்றும் ஊர் பொதுமக்கள் சேர்ந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வடக்கு விஜயநாராயணம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா முடிந்து ஒரு தினமே ஆன நிலையில் அவரை காண வரும் பக்தர்களை வழிமறித்து இவர் கடவுள் இல்லை. வெறும் கல்லு,சாத்தான் என்று பக்தர்களின் நம்பிக்கையை அசிங்கப்படுத்தும் விதத்தில் பேசி மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி பாளையங்கோட்டை சிஎஸ்ஐ சபையை சார்ந்த ஊழியர்களை ஹிந்து அமைப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூடி விஜய நாராயணன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள நிகழ்வால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் மாதம் 100 குடும்பங்களை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடும் மாதத்தில் இத்தனை நாள் அவர்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்றும் குறிப்பேடு வைத்துக் கொண்டு எந்தெந்த கிராமங்களில் எத்தனை வீடுகள் உள்ளன என்றும் தெள்ளத் தெளிவாக மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் அதற்கான ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.