மதச்சார்பின்மை பேசியே ஹிந்துக்களை அழிப்பதாக பிரபல அமெரிக்க எழுத்தாளர் குற்றச்சாட்டு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகள் தி.மு.க மற்றும் தி.க.வினரால் தொடர்ந்து கேலி, கிண்டல்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, கோவில்களை இடிப்பதும் அதன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்களை நடத்துவதும் இன்று வரை தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதுதவிர, பெரும்பாலான கோவில்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றன. அதன் மூலம், கிடைக்கும் வருமானங்கள் அனைத்தும் மற்ற திட்டங்களுக்கு இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. ஆனால், மசூதி, சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் பற்றி அரசு பேசுவதில்லை என்பதே கசப்பான உண்மை. இதுதவிர, சிறுபான்மையினரின் வழிபாட்டு தலங்களை இன்று வரை அரசு ஏன்? தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவில்லை என்ற கேள்விக்கு முறையான பதில் இன்று வரை இல்லை என்பதே திண்ணம்.
இப்படிப்பட்ட சூழலில், பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மதச்சார்பின்மை என்றால் ஹிந்து கோவில்கள் மீது மசூதியை கட்ட முடியும். ஹிந்து தெய்வங்களை இழிவுப்படுத்த முடியும். ஆனால், முகமதுவை மட்டும் விமர்சனம் செய்ய முடியாது. அதேபோல, ஹிந்து கோயில்கள் மீது அரசாங்கம் தனது முழு ஆதிக்கத்தை செலுத்த முடியும். ஆனால், மசூதி, சர்ச் மீது மட்டும் கிடையாது. மதச்சார்பின்மை என்பது தோல்வி அடைந்தது மற்றும் நியாமற்ற முறை. ஆகவே, மதச்சார்பின்மையினால் ஹிந்துக்கள் மரணம் அடைகிறார்கள் என்று தனது குற்றச்சாட்டினை முன்வைத்து இருக்கிறார்.