டெல்லி முதல்வர் ஒரு சாபம்: வெளுத்து வாங்கிய அமெரிக்க எழுத்தாளர்!

டெல்லி முதல்வர் ஒரு சாபம்: வெளுத்து வாங்கிய அமெரிக்க எழுத்தாளர்!

Share it if you like it

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து கிண்டல் செய்த டெல்லி முதல்வருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லீன்.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்பாவி மக்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் எவ்வாறெல்லாம் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்பது விவரிக்கிறது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. அதேசமயம் மிகவும் ஆழமாகவும், அழுத்தமாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னி ஹோத்ரி. படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் என மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

காஷ்மீர் மக்களின் வலியை உணர்த்தும் இப்படத்துக்கு ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வரி விலக்கு வழங்கி இருந்தன. அந்த வகையில், இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பலர் டெல்லி முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருந்தனர். இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் வரிவிலக்கு வேண்டும் என்றால், யூ டியூப்பில் வெளியிடுங்கள் என்று நக்கலாக சட்டசபையில் பதில் அளித்து சிரித்து இருந்தார். டெல்லி முதல்வரின் கருத்தை கேட்ட பலர் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பல கொடுமைகளை அனுபவித்த ஹிந்து பண்டிகளின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர், ஆசிரியர், எழுத்தாளர் என்னும் பன்முகத் தன்மை கொண்ட ரெனீ லின். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடும் கண்டனத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீங்கள் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட காஷ்மீரி இந்துக்களை பார்த்து சிரிப்பதும் கேலி செய்வதும் இழிவான செயல். ஹிட்லர் அந்த யூதர்களை கொன்றது வேடிக்கையானது என்று நினைக்கிறீர்களா அல்லது இந்துக்களை மட்டும் நீங்கள் வெறுக்கிறீர்களா?டெல்லிவாசிகளுக்கு கெஜ்ரிவால் ஒரு சாபம். ஒரு பிரிவினருக்கு இலவசங்கள், தேச விரோதிகளுக்கு ஆதரவு அளிக்கும் மோசடி முதல்வர் என வெளுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .

பிறப்பால் நான் அமெரிக்கன் உணர்வால் நான் இந்தியன். உலகத்திற்கே இந்தியா தான் தாய் நாடு, இந்தியர்களுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக கூறியவர். இந்தியாவிற்கு எதிராக யாரேனும் கருத்து தெரிவித்தால் உடனே கடும் கண்டனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ய கூடியவர்.


Share it if you like it