இந்து பாரம்பரியத்தை மறந்துவிடாதீர்கள்: இந்த உலகிற்கே இந்தியா கொடுத்த பரிசு – அமெரிக்க எழுத்தாளர் வேண்டுகோள்!

இந்து பாரம்பரியத்தை மறந்துவிடாதீர்கள்: இந்த உலகிற்கே இந்தியா கொடுத்த பரிசு – அமெரிக்க எழுத்தாளர் வேண்டுகோள்!

Share it if you like it

ஹிந்து பாரம்பரியத்தை யாரும் மறந்து விடாதீர்கள் என பிரபல அமெரிக்க எழுத்தாளர் ரெனீ லின் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்

எழுத்தாளர், சமூக ஆர்வலர், ஆசிரியர் எனும் பன்முகத் தன்மை கொண்டவர் ரெனீ லின். இவர், இந்தியர்கள் மீதும் ஹிந்துக்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர். ஹிந்துக்களின் கலாச்சாரம் மற்றும் இந்தியாவிற்கு எதிராக பிரிவினைவாதிகள் தெரிவிக்கும் கருத்திற்கு தனது முதல் கண்டன குரலை பதிவு செய்யும் நபராக இருந்து வருகிறார். அந்த வகையில், பிறப்பால் நான் அமெரிக்கன், இதயத்தால் நான் இந்தியன். இந்தியா எனது வீடு என்று கூறியவர்.

பிறப்பால் நான் அமெரிக்கன்…!! உணர்வால் இந்தியன்…! ராணுவ வீரர்களுக்கு..! அமெரிக்க கட்டுரையாளர் இரங்கல்..!

இதனிடையே, தயவு செய்து என்னை இனவாதி என்று அழைக்காதீர்கள் அல்லது இந்து கடவுள்களையோ அல்லது மாடுகளையோ வணங்குவதற்காக என்னை கேலி செய்யாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவிலிருந்து தோன்றிய உலகின் மிகப்பழமையான மதம் இந்து மதம், அவர்கள் எந்த நாட்டையும் தாக்கவோ படையெடுக்கவோ இல்லை. உண்மையில், இந்து மதம் உலகின் மிக அமைதியான, மனிதாபிமான மதம் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் கலாச்சாரம் உலகிலேயே சிறந்தது. இந்திய மரபுகளை எதனாலும் மிஞ்ச முடியாது. உங்களை இதயப்பூர்வமாக தொடும் இத்தகைய முக்கியத்துவம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை. உலகம் முழுவதும் சுற்றும் ஒரு பயணியாக சொல்கிறேன் இது எனது பாரபட்சமற்ற கருத்து. உங்கள் இந்து பாரம்பரியத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இது இந்தியாவிற்கும், உலகிற்கு இந்திய நாடு அளித்த மிகப்பெரிய பரிசு என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்நிய நாட்டை சேர்ந்தவர் பாரத நாட்டின் பெருமைகளை கொண்டாடி வருகிறார். ஆனால், வாழும் நாட்டிற்கு எதிராக சீமான், திருமா உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it