பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
இதனால், தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்பேரில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் போராட்டம் காரணாக, பல்வேறு அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.