பாகிஸ்தானில் தலை துண்டிக்கப்பட்ட குழந்தைக்காக உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை கவுன்சில்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை என பிரபல எழுத்தாளர் ரித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தர்பார்க்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சனா குமாரி. ஹிந்து மதத்தைச் சேர்ந்த இவர், நிறைமாத கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவ வலி ஏற்பட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அங்கு பிரசவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அங்கிருந்த ஊழியர் ஒருவர் சனா குமாரிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். அந்தவகையில், கருப்பையில் இருந்த பச்சிளம் குழந்தையை வெளியே எடுக்க முயன்றபோது தலை சிக்கிக் கொண்டுள்ளது. இதன்காரணமாக, குழந்தையின் தலையை வெட்டி அதை கருப்பையிலேயே வைத்து தைத்து விட்டார்.
அந்தவகையில், சனா குமாரியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நடந்த விஷயம் வெளியே தெரிந்தால் எங்கே சிக்கல் ஆகிவிடும் என்று கருதிய மருத்துவ ஊழியர், அற்பதனமான காரணங்களை கூறி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டனர். இதையடுத்து, அவரது உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு மிதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு, சனா குமாரியை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோதுதான், கருப்பையில் குழந்தையின் தலை மட்டும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இச்சம்பவம், பாகிஸ்தானையும் கடந்து உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானிற்கு வால் பிடிக்கும் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் சில்லறை போராளிகள் இன்று வரை இதுகுறித்து பேசவில்லை என்பதே கசப்பான உண்மை. அந்தவகையில் பிரபல சமூக செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளரான ரித்து, பாகிஸ்தானை சேர்ந்த செவிலியர்கள் குழந்தையின் துண்டித்த தலையை கருப்பையில் வைத்து இருக்கிறார்கள். இந்துக் குழந்தை மனிதாபிமானமற்ற படுகொலை பற்றி இன்னும் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை கவுன்சில்கள் ஏன்? அமைதி காத்து வருகிறது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.