திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அங்கு மழை பெய்தது. மழை பெய்தாலும் சாலை அமைக்கும் பணியை விடாமல் தேங்கி நிற்கும் மழைத்தண்ணீரின் மேலே தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர் தொழிலாளர்கள். மழையும் அவர்களுக்கு சளைக்காமல் தொடந்து கொட்டி தீர்த்தது.
இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. கொட்டி தீர்க்கும் மழைநீரில் தார்சாலை அமைத்தால் எப்படி தாங்கும் என்ற அறிவில்லாமல் சாலை போட்ட தொழிலாளர்களையும், திமுக அரசையும் விமர்சித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.