இழப்பீடாக 1 கோடி ரூபாய் : தமிழகத்தில் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் – ஏபிவிபி !

இழப்பீடாக 1 கோடி ரூபாய் : தமிழகத்தில் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் – ஏபிவிபி !

Share it if you like it

உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று ABVP அமைப்பு சார்பில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நெல்லையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சமீபகாலமாக திராவிட மாடல் வாடிக்கையாக மெத்தனப்போக்கால் மர்மமான முறையில் உயிரிழப்பது வழக்கமாகிவிட்டது.
கல்வி என்ற உன்னதமான சேவையை பள்ளிக் கட்டணம் என்னும் பெயரில் அடாவடி வசூல் செய்யும் நெல்லை, சமாதானபுரம் “பெல்” பள்ளியின் தவறான நிர்வாகத்திறமையால் 04/01/2024 அன்று 9ம் வகுப்பு படிக்கும் (வயது 14) என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

சகோதரர் நரேனின் மரணத்திற்கு காரணமான பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளியின் தாளாளர் ஆகியோரை கைது செய்து மேலும் இதுபோன்ற ஒரு துயரச் சம்பவம் ஏற்படாதவாறு, தமிழக முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக 1 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு கடுமையான சட்டங்கள் இயற்றி மாணவர்கள் நலனை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கும் விதமாக தமிழகத்தில் நவோதயா பள்ளி தொடங்க வேண்டும் என்று ABVP தென் தமிழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறோம்.


Share it if you like it