கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அதிகாலையில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நிலச்சரிவு மீட்பு பணிக்காக ஏற்கனவே கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர். இந்த நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து கேரள மாநில முதல்வரிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், ”வயநாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனது எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும், காயமடைந்தவர்களுடன் பிரார்த்தனைகளும் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவதற்காக தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்த அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் கேரளாவுக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் கேரளா முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தமிழக அரசு சார்பாக 5 கோடியும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. தற்போது மாநில மீட்பு குழுவினர் மட்டுமன்றி, ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, நிலச்சரிவில் சுமாக் 350 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படும் முண்டக்கை பகுதிக்கு தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ராணுவ மருத்துவ குழுவும் அங்கு விரைந்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியனும் வயநாடு சென்றுள்ளார்.