அப்படி ஒரு உருட்டு இப்படியொரு உருட்டு – திருமாவின் உண்மையான சுயரூபம்..!

அப்படி ஒரு உருட்டு இப்படியொரு உருட்டு – திருமாவின் உண்மையான சுயரூபம்..!

Share it if you like it

  • தி.மு.க.,வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும். தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி. தமிழக ஊடகங்களையும், பட்டியலின சமூக மக்களையும். மிகவும் இழிவுப்படுத்தி அண்மையில் பேசி இருந்ததற்கு  தனது கண்டனத்தையோ, எதிர்ப்பையோ, பதிவு செய்யாமல் மெளனம்.
  • திமுகவின் மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன்  தலைமை செயலாளரை சந்தித்து (13-5-2020) மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா, தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்று கூறியுள்ளார். அதாவது, தாழ்த்தப்பட்ட மக்களை தான் மூன்றாம் தர மக்கள் போல நடத்துவார்கள் என்று தனது அழுக்கு எண்ணத்தை வெளிப்படுத்திய தயாநிதி மாறனுக்கு கண்டனத்தையோ, எதிர்ப்பினையோ, தெரிவிக்காமல் அதே கள்ள மெளனம்.
  • அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் அண்மையில் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் காலணி அணிந்து கொண்டு சட்டமேதை அம்பேத்காருக்கு மரியாதை செலுத்தினார் இதற்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல் அதே கள்ள மெளனம்.
  • மத்திய அரசு கடும் முயற்சிக்குப் பின் கொரோனா தடுப்பு மருந்தை  நடைமுறைக்கு கொண்டு வந்ததற்கு இன்று வரை தனது பாராட்டையும், வாழ்த்துக்களையும் கூற மனம் இல்லாமல் பிரபல நடிகர் விவேக் மரணத்தில் இவ்வாறு கூறியது.
  • நடிகர்_விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி.

வாழும் நாட்டிற்கு துளியும் விசுவாசமாக இல்லாமல், பாரத தேசத்திற்கு எதிராகவும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும் மட்டுமே இன்று வரை திருமாவளவன் குரல் கொடுத்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில். ஹிந்து மதத்தில் மட்டுமே ஜாதி உள்ளது என்று திருமாவளவன் உருட்டிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image

Image

காலணிகள் அணியாமல் தந்தைக்கு மரியாதை செலுத்திய மு க ஸ்டாலின்
காலணிகளை அணிந்து சட்டமேதை பாரத் ரத்னா DR அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும் மு க ஸ்டாலின்

Image
திருமுருகன் காந்தி உருட்டிய அதே உருட்டு

Share it if you like it