ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசுவதில் திமுகவினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். அந்த அளவிற்கு கீழ்த்தரமாக பேசுவார்கள். இந்த நிலையில் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி படித்து பட்டம் வாங்கும் பட்டதாரிகளை நாயுடன் ஒப்பிட்டு மிகவும் கொச்சையாக பேசியுள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இன்று (ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :-
நீட் தேர்வை இன்று, நேற்று அல்ல எப்போது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து எதிர்க்கும் இயக்கம் திமுக. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை. ராகுல் இந்த நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டதை நான் மனமார பாராட்டுகிறேன்.
சென்னையில் நடைபெற்ற நீட் ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “நான் படிக்கின்ற காலத்தில் ஊரில் ஒருவர் தான் பி.ஏ பட்டம் வாங்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு நாய் கூட பி.ஏ. பட்டம் வாங்குகிறது. அதற்கு காரணம் திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
கஷ்டப்பட்டு படித்து தன் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்றும், நாள் முழுதும் உழைத்து களைத்து வரும் பெற்றோர்களை உட்காரவைத்து அவர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்றும், உடன் பிறந்த அக்காவோ தம்பியோ அவர்களை கரை ஏற்றி விட்டு குடும்பத்திற்காக எல்லாவித சுகங்களையும் தியாகம் செய்து இரவு பகலாக படித்து பட்டம் வாங்கும் இளைஞர்களை நாயின் ஒப்பிட்டு பேசியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி. அதுவும் இவர்கள் போட்ட பிச்சையினால் தான் இளைஞர்கள் பட்டம் வாங்குகிறார்கள் என்று வாய் கூசாமல் கேவலமாக பேசியுள்ளார்.
நூறு இளைஞர்களை கொடுங்கள் உலகத்தை மாற்றி காட்டுகிறேன் என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட இளைஞர்களை இவ்வளவு கேவலமாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஆர்.எஸ் பாரதியின் சர்ச்சை பேச்சு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்கிற கேள்வியும் எழுகிறது.