கலைஞர் பெயரை சொன்னால் தான் இனி பாஸ்போர்ட்டே தருவோம் – ஆர்.எஸ். பாரதி திமிர் பேச்சு!

கலைஞர் பெயரை சொன்னால் தான் இனி பாஸ்போர்ட்டே தருவோம் – ஆர்.எஸ். பாரதி திமிர் பேச்சு!

Share it if you like it

அண்ணா, பெரியார், கலைஞர் பெயரை சொன்னால் தான் தமிழகத்தில் நுழைய பாஸ்போர்ட் கொடுப்போம் என தி.மு.க. மூத்த தலைவர் பேசிய கருத்த பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் முதல் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் வரை தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாக பேசி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் ஆ.ராசா. இவர், சமீபத்தில் நாமக்கல் மாநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது,

தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட தி.மு.க அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் சொல்லிக் கொள்கிறேன்; அண்ணா வழியில் செல்லும் எங்களை பெரியார் வழியில் செல்ல வைத்து விடாதீர்கள். ’தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்’ என்று பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து, செங்கொடியின் நினைவேந்தல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வன்னியரசு, செங்கொடியின் இந்த நினைவு நாளில், விடுதலை தமிழகத்தின் முழுமையான விடுதலை. தமிழ், தமிழர்களின் உரிமை இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ்நாடு என்பது தனித்துவமான நாடு என்பதை அடைவது தான் செங்கொடிக்கு நாம் செலுத்த கூடிய உறுதிமொழி, கடமை என குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து, ஆதன் ஊடக நெறியாளர் மாதேஷ், முகில் என்பவரை சமீபத்தில் பேட்டி கண்ட போது, அந்த நபரின் பேச்சு முழுக்க முழுக்க இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்து இருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யுமான .ஆர்.எஸ். பாரதி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் தலைமையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசியிருக்கிறார். வழக்கம் போல, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மிக கடுமையாக சாடி இருக்கிறார். மேலும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

இதுதவிர, தமிழகத்தில் இனி யார் நுழைய வேண்டுமானாலும் அண்ணா, பெரியார், கலைஞர் பெயரை சொன்னால் தான் நாங்கள் பாஸ்போர்டே வழங்குவோம் என திமிருடன் பேசியுள்ளார். இப்படியாக, விடியல் ஆட்சியில் தொடர்ந்து பிரிவினை கருத்துக்கள் தமிழக மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it