ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் : போலீசாருக்கு குட்டு வைத்த கோர்ட் !

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் : போலீசாருக்கு குட்டு வைத்த கோர்ட் !

Share it if you like it

ஹிந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான மற்றும் விஷேஷ நாளாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றுதான் தசரா என்று அழைக்கப்படும் விஜயதசமி. விஜயதசமி என்றால் வெற்றி திருநாள் என்று பொருள்படும்.

அதாவது நவராத்திரியின் போது துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாளில் நவமியில் மகிஷாசுரனை வதம் செய்தாள். மறுநாள் தசமியில் தேவர்கள் அந்த வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியதால், நாமும் அதை விஜயதசமி என்று கொண்டாடுகிறோம்.

இப்படிப்பட்ட புனிதமான விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட அமைப்பு தான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம். இந்த அமைப்பானது அடுத்த வருடத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடப்போகிறது. இந்திய வரலாற்றில் நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது மிக கம்பீரமாக கோலோச்சி வருகிறது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி விஜயதசமி விழா வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்த அமைப்பு தொடங்கிய விஜயதசமி நாளை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்துவது வழக்கம். இதனை தொடர்ந்து விஜயதசமியை முன்னிட்டு அடுத்த மாதம் அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 58 இடஙக்ளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபு மனோகர் அவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் முன்னதாகவே விதிமுறைகளை வகுத்து, ஊர்வலம் நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், ஆனால் அந்த உத்தரவை காவல்துறையினர் மதிப்பதே இல்லை எனவும் வாதிட்டார். இதைதொடர்ந்து நீதிபதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு உச்ச நீதிமன்றமே அனுமதி அளித்தும் காவல் துறையினர் எதற்காக தடுக்கின்றனர் என்று கேள்வி எழுப்பி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *