மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று இறைவன் திருவடியை அடைந்தார். பல்லாயிரக்கணக்கானோர் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போல் அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக கல்வி நிலையம் துவக்கியவர் மற்றும் மருத்துவம் பார்க்க இயலாதவர்களுக்கு மருத்துவமனை துவங்கி பெருஞ்சேவை புரிந்தவர். இப்படி எண்ணிலடங்கா சேவையாற்றிய பங்காரு அடிகளாரின் மறைவு, ஆன்மீக அன்பர்களுக்கும், அன்னை ஆதிபராசக்தியின் பக்தர்களுக்கும் பேரிழப்பாகும். இந்நிலையில் அடிகளார் உடலுக்கு RSS சார்பில் நேரில் சென்று காஞ்சிபுரம் கோட்டத் தலைவர் திரு. ஏழுமலை, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் திரு. சுவாமிநாதன், மாநில அமைப்பாளர் திரு. பூ.மு. ரவிக்குமார் அஞ்சலி செலுத்தினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர் திரு மோகன் ஜி பகவத் மற்றும் அகில பாரத பொதுச் செயலாளர் திரு தத்தாத்ரேய ஹோசபாலே ஆகியோர் பங்காரு அடிகளார் மறைவிற்கு சமூக வலைதளத்தில் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

