ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்ற அமைப்பானது, தேசியவாதிகளால், உருவாக்கப்பட்ட அமைப்பு. 1925-ஆம் ஆண்டு செப்டம்பர் 27 -ஆம் தேதி விஜயதசமி தினத்தன்று இந்த அமைப்பு துவங்கப்பட்டது.
சமூகத்தில், “சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவரும் சமம்” என்ற உயரிய நோக்கில், இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லாது, வெளிநாடுகளிலும் இயங்குகின்றது. பாரத நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அதன் உயரிய பண்புகளை பாதுகாப்பது. இந்தியாவை, தனது தாய் நாடாக நினைத்து அதன் பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது என, பல்வேறு உயரிய நோக்கங்களை கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், ஐம்மு – காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டும் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என தெரிவித்து இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு இதற்கு உரிய பதில் அளிக்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு வரும் 22 – ஆம் தேதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என தமிழக காவல்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.