மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சி அடுத்த வருடம் கவிழ்ந்து விடும் என பிரபல ஜோதிடர் கணித்து இருக்கிறார்.
பாரதப் பிரதமர் மோடி மீது உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, பா.ஜ.க.விற்கு எதிராக தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை மம்தா பேனர்ஜி மேற்கொண்டு வருகிறார். இதுதவிர, பா.ஜ.க. போட்டியிடும் மாநிலங்களில் தனது கட்சியின் சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கி தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறார். அந்தவகையில், கோவா சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார்.

அதேபோல, உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவிற்கு பிரச்சாரம் மேற்கொண்டு அவரை மூலையில் அமர வைத்தார். இதனை தொடர்ந்து, பா.ஜ.க ஆளும் திரிபுராவில் சமீபத்தில் நடைபெற்ற 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்கி தனது தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்டார். இப்படியாக, தொடர்ந்து தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா.

இதனை தொடர்ந்து, சும்மா இருந்த விடியல் முதல்வரை தூண்டி விட்டு, யஷ்வந்த் சின்ஹாவை எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்கினார் மம்தா. ஆனால், பா.ஜ.க.வின் வேட்பாளரை பார்த்த பின்பு மிரண்டு போன அவர் தனது முழு ஆதரவும் திரெளபதிக்கு தான் என ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களை நடுத்தெருவில் விட்டார்.
இப்படியாக, தோல்விக்கு மேல் தோல்வி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கே துரோகம் என மேற்கு வங்க முதல்வரின் போக்கு இன்று வரை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான், எனது ஜோதிட ஆய்வின் படி, மம்தா பானர்ஜியின் அரசாங்கம் ஏப்ரல் 15, 2023 – க்குப் பிறகு கவிழ்ந்து விடும். 2023 – ன் முதல் பாதியில் தீய சக்திகளின் போராட்டத்தால் உள்நாட்டு கலவரம் ஏற்படும். அதன் காரணமாக, மம்தா பேனர்ஜின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று பிரபல ஜோதிடர் ருத்ரா கரன் பர்தாப் கணித்து இருக்கிறார். இவரது, கணிப்பு 10-க்கு 9- சரியாக இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
