விடிய விடிய சரக்கு சேல்ஸ்… சாராய அமைச்சர் வரை மாமூல்!

விடிய விடிய சரக்கு சேல்ஸ்… சாராய அமைச்சர் வரை மாமூல்!

Share it if you like it

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களில் விடிய விடிய சரக்கு விற்பனை நடைபெறுவதும், அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை மாமூல் செல்வதும் அம்பலமாகி இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கரூர் கம்பெனி என்கிற பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ஆனால், அமைச்சர் இதை மறுத்து வந்த நிலையில், கரூர் கம்பெனி என்கிற பெயரில் அமைச்சரின் ஆட்கள் வசூல் வேட்டை நடந்த சம்பவம் தீபாவளி சமயத்தில் வெளிச்சத்துக்கு வந்து சந்தி சிரித்தது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள்தான் இந்த வசூல் வேட்டையை அம்பலப்படுத்தினார்கள். இந்த சூழலில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் திருட்டுத்தனமாக விடிய விடிய சரக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் இருந்து வந்த நிலையில், தற்போது இதுவும் சேலம் மாவட்டத்தில் அம்பலமாகி இருக்கிறது.

சேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை, கிச்சிப்பாளையம், மூணு ரோடு, களரம்பட்டி, கருங்கல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும், பாருடன் கூடிய டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் சரக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்தது. அதாவது, இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடை மூடப்பட்டு விட்டாலும், பார்களில் இருக்கும் சிறிய கதவைத் திறந்து விட்டு, குடிமகன்களுக்கு சரக்கு சப்ளை செய்யப்படுமாம். அதேபோல, மதியம் 12 மணிக்குத்தான் டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்படும் நிலையில், அதிகாலை 5 மணிக்கே சிறிய கதவை திறந்துவிட்டு, சரக்கு சப்ளை செய்யப்படுமாம். இதை போலீஸாரும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருக்க, போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக மாமூல் சென்று விடுமாம். அதேபோல, அதிகாரிகளுக்கும் பாட்டிலுக்கு இவ்வளவு என்று கமிஷன் கொடுக்கப்படுமாம்.

இந்த சூழலில்தான், மேற்கண்ட 24*7 விற்பனையில் அமைச்சர் வரை மாமூல் செல்கிறது என்கிற விஷயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, சேலம் மாநகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் முன்பு போலீஸ்காரர் ஒருவர் நிற்பதைப் பார்த்துவிட்டு, ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போது, கடையின் சிறிய கதவை திறந்து விட்டு, உள்ளே குடிமகன்களுக்கு சைடிஷுடன் சரக்கு சப்ளை செய்யப்பட்டிருக்கிறது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், அங்கு நின்றிருந்த போலீஸ்காரரிடம் கேட்கிறார். அதற்கு அந்த போலீஸ்காரரோ இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை மாமூல் போகிறது என்றும், இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கிறது என்றும் கேஷுவலாகக் கூறுகிறார்.

இந்த வீடியோவை அந்த பிரமுகர் அப்படியே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிட்டார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு, சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்து வருகின்றனர் பொதுமக்களும், நெட்டிசன்களும்.


Share it if you like it