கொரோன தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள், மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் தமிழக அரசிற்கு உதவும் வண்ணம் தனது கருத்தை டுவிட்டரில் இவ்வாறு வெளியிட்டு உள்ளார்.
ஈஷாவித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில், தமிழகத்திற்கு உதவ முன்வந்துள்ள. ஈஷா.,விற்கு நன்றி கூட தெரிவிக்க வேண்டாம். அருகில் உள்ள காருண்யாவும் இது போல உதவ முன்வர வேண்டும் என்று. வீரமணி, ஜோதிமணி, திருமா, மணியரசன், உள்ளிட்ட போராளிகள் கோரிக்கையாவது வைப்பார்களா? என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#ஈஷாவித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய #கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். -Sg @ishavidhya #BeatTheVirus #COVID
— Sadhguru (@SadhguruJV) April 27, 2021