சத்தியம் தொலைக்காட்டி நெறியாளர் முக்தார் ஒரு டுபாக்கூர். சிறுபான்மையினருக்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்த திட்டங்கள் பற்றிய பட்டியலை கொடுத்ததால் எனது பேட்டியை முக்தார் ஒளிபரப்பவில்லை என்று அக்கட்சியின் சிறுபான்மை பிரிவின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
பா.ஜ.க.வின் சிறுபான்மைப் பிரிவு தேசிய செயலாளராக இருப்பவர் வேலூரைச் சேர்ந்த இப்ராஹிம். இவர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மை இன மக்களுக்கு செய்யும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறுவார். அதேபோல, தி.மு.க. அரசு செய்யும் ஊழல்கள், முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்தும் காரசாரமாகப் பேசுவார். இவரிடம், சத்தியம் தொலைக்காட்சியின் நெறியாளராக இருக்கும் முக்தார் சமீபத்தில் பேட்டி எடுத்திருக்கிறார். இதுகுறித்து திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் தெரிவித்திருந்தார் வேலூர் இப்ராஹிம். ஆனால், அந்தப் பேட்டி இதுவரை அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை.
இந்த நிலையில், பேசு தமிழா பேசு என்கிற தனியார் யூடியூப் சேனல், வேலூர் இப்ராஹிமிடம் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியது. அப்போது, அவரிடம் சத்தியம் தொலைக்காட்சியில் முக்தாருக்கு அளித்த பேட்டி ஒளிபரப்பாகாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வேலூர் இப்ராஹிம்,”சத்தியம் டி.வி. முக்தார் ஒரு டுபாக்கூர் நெறியாளர். திரைப்பட காமெடி நடிகர் வடிவேலு போன்றவர். பா.ஜ.க.விலுள்ள சில நிர்வாகிகளை நேர்காணலுக்கு கூப்பிடுவார். எதற்காக என்றால், அவர்களை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும். பா.ஜ.க.வினர் புள்ளி விவரங்கள் தெரியாதவர்கள். எந்த கருத்தும் இல்லாதவர்கள் என்பதுபோலவும், தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பதுபோலவும் பேசுவதோடு, காட்சிகளை வெட்டி, ஒட்டி தில்லாலங்கடி வேலைகளை செய்து அசிங்கப்படுத்துவார். மேலும், நேர்காணலுக்கு வருபவர்களை மிரட்டி, உருட்டுவதும், வீராவேசமாக பேசுவதும், பில்டப் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், முக்தார் என்னை நேர்காணலுக்கு அழைத்தார். இதுகுறித்து நான் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, நேர்காணலுக்குச் சென்றேன். வழக்கம்போல பேட்டியை தொடங்கிய முக்தார், 2-வது நிமிடத்திலேயே சிறுபான்மையினருக்கு மோடி என்ன கிழித்தார் என்று கேட்டார். அதற்கு நான், முக்தாரைப் போன்ற முட்டாள்களுக்கு வேண்டுமானால் சிறுபான்மையினருக்கு மோடி என்ன செய்தார் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் நன்றாக தெரிந்தும், புரிந்தும் வைத்திருக்கிறார்கள். உடனே, வீடியோவை கட் பண்ணச் சொன்னார். நான் ஏன் என்று கேட்டதற்கு, என்ன சார் நீங்க முட்டாள் கிட்டாள்னு எல்லாம் பேசுறீங்க என்றார். அதற்கு, பாரதத்தின் பிரதமரை என்ன கிழித்தார் என்று கேட்டால், முக்தார் முட்டாளாக இருந்தால் மட்டுமே இப்படி கேட்க முடியும். ஒரு நாகரிகம் வேண்டாமா, ஒரு நெறியாளர் இவ்வாறுதான் பேசுவார்களா?
உனக்கு தைரியம் இருந்தால் ஸ்டாலினை இவ்வாறு பேச முடியுமா? ஆகவே, ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கு சொம்பு தூக்குவதை முக்தார் நிறுத்த வேண்டும் என்று கூறினேன். இது அப்படியே வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இதை எப்படி முக்தாரால் ஒளிபரப்ப முடியும்? மேலும், சிறுபான்மை மக்களுக்கு மோடி என்ன செய்தார் என்று கேட்டார். நான் பிரதமர் மோடி செய்ததை எல்லாம் ஒவ்வொன்றாக பட்டியலிட்டு கூறினேன். உடனே, நீங்க பொய் சொல்லுறீங்க, பொய் சொல்லுறீங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தார். உண்மையைச் சொல்கிறேன், அந்த இடத்தில் நான் முக்தாரை ஒரு நெறியாளராகப் பார்க்கவில்லை. ஒரு கமெடியனாகத்தான் பார்த்தேன். இப்படி ஒரு காமெடி பீஸையா, இப்படி கேள்வி கேட்பார், அப்படி கேள்வி கேட்பார் என்று பலரும் பில்டப் கொடுத்தார்கள் என்று நினைத்து சிரிப்புதான் வந்தது” என்று காட்டமாக பேசியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோவின் லிங்க்…
https://www.facebook.com/watch/?v=839600630590877