தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஆதன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இணையதள ஊடகமான ஆதன் ஊடகத்திற்கு, அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது ;
தமிழகத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க. எதிர்ப்பினை தமிழகத்தில் தீவிரமாக கடைப்பிடிக்கும் கட்சி எது என்று பார்த்தால் அது பா.ஜ.க. தான். இளம் தலைமுறையினர், இளம் வாக்காளர்கள் தான் இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக இயங்கி வருகின்றனர். இவர்கள்தான், தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் வலுவான சக்தியாக இருக்கிறார்கள்.
18 வயது முதல் 30 வயது வரை உள்ள வாக்காளர்கள் இருக்கின்றனர். அரசியலே தெரியாத ஒரு 23 -வயது இளைஞன் அரசியலை உற்று நோக்கும் போது, அண்ணாமலையை தீர்மானிப்பான அல்லது உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பானா? அரசியல் அனுபவம் இல்லாத 23 -வயது இளைஞனுக்கு யார் தலைவராக தெரிவார் என்று சவுக்கு சங்கர் நெறியாளர் மாதேஷிடம் கேட்பது போல அந்தகாணொளி அமைந்துள்ளது.