பிரபல ஆபாச பேச்சாளர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்.
தி.மு.க மூத்த தலைவரும் தூத்துக்குடி எம்.பியுமாக இருப்பவர் கனிமொழி. இவரது, தீவிர ஆதரவாளராக பார்க்கப்படுபவர் சவுக்கு சங்கர். எம்பியின் ஆசி இருக்கும் ஒரே காரணத்தினால் மாற்று கட்சியில் உள்ள தலைவர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அதனைமெய்ப்பிக்கும் வகையில், குறிப்பாக கனிமொழிக்கு எதிராக செயல்படும் தி.மு.க. தலைவர்களையும் வாரிசுகளையும் இன்று வரை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், தமிழக முதல்வரின் மகனும் சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் குறித்து கூறியதாவது; கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திட்டியிருந்தார்.
அதேபோல, தமிழக காவல்துறையினர், பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான், பிரபல பெண் பத்திரிக்கையாளரான சந்தியா ரவி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பாரதப் பிரதமர் மோடியை டேக் செய்து தனது புகாரினை பதிவு செய்துள்ளார்.
சந்தியா ரவி புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது;
மாநில மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்து இருக்கிறேன். கடந்த 2018- ஆம் ஆண்டு முதல் என்னை தனிப்பட்ட முறையில் துன்புறுத்துவது, அவதூறு செய்வது, விமர்சனம் செய்வது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன்காரணமாக, சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் தெரிவித்து இருந்தேன். அதன் மீது இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்து இருந்தேன். அந்தவகையில், இன்று மதியம் 2 மணியளவில் நேரில் ஆஜர் ஆகுமாறு எனக்கு சம்மன் அனுப்பி இருக்கின்றனர். குறைந்தபட்சம் இந்த மன்றமாவது எனக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறேன். இந்த விஷயத்தில் அனைவரின் ஆதரவையும் கேட்டுக்கொள்கிறேன் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.