எங்களுடைய 60 வருட கனவு…  உருக்கமுடன் நன்றி தெரிவித்த  அஸ்வினி!

எங்களுடைய 60 வருட கனவு… உருக்கமுடன் நன்றி தெரிவித்த அஸ்வினி!

Share it if you like it

நரிக்குறவர் இனத்தை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த பாரத பிரதமர் மோடிக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்த அஸ்வினியின் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

சமூகத்தில் உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்காமல், நரிக்குறவர் மற்றும் இருளர் சமூகம் படும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம். இவர்கள், அனுபவிக்கும் கொடுமைகள் அவலங்கள் ஏராளம். உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால், அரசின் சலுகைகளை பெற வேண்டி இவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் பன்மடங்கு.

இதனையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, மத்திய அரசுக்கு அண்மையில் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை, ஏற்றுக் கொண்ட மத்திய அரசு சமீபத்தில், அதற்கு ஒப்புதல் அளித்து இருந்தது. இதன்மூலம், நரிக்குறவர் சமூகம் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களின் உரிமைக்காக போராடும் ஒரே கட்சி பா.ஜ.க. என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் அகியுள்ளது.

உண்மை இவ்வாறு இருக்க, அண்ணாமலை எடுத்த முயற்சிக்கு நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.விற்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், இதில் தனக்கும் பங்கு உண்டு என்பது போல விடியல் அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது. இந்நிலையில், நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி, எங்களுடைய 60 வருட கனவை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் மோடிக்கு நன்றி என உருக்கமுடன் பேசிய காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it