கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரிய தள்ளப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாகவே தங்கள் வகுப்பறையில் சென்று படிக்க தொடங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளியின் மேற்கூரை திடிரென்று வகுப்பில் அமர்ந்து படித்து கொண்டிருந்த மாணவர்கள் மீது விழுந்தது. இதனால் மூன்று மாணவர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த மூன்று மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் அந்த பள்ளியில் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் நிலைமை இவ்வாறு இருக்க முதல்வர் ஸ்டாலின் மகன் அமைச்சர் உதயநிதி சென்னையில் கார் ரேஸ் நடத்த வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார். இந்த கார் ரேஸினால் தமிழக மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. நிவேதா பெத்துராஜ் என்கிற நடிகையை திருப்தி படுத்துவதற்காகத்தான் உதயநிதி இவ்வாறு மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார் என்று பிரபல அரசியல் விமர்சகர் மாரிதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளிகளின் நிலைமையும், அரசு பேருந்துகளின் நிலைமையும் கவலைக்கிடமாக பரிதாபகரமான அவல நிலையில் தான் உள்ளது. இதனை மாற்றி மக்களுக்கு தரமான பேருந்துகளும் மாணவர்களுக்கு தரமான பள்ளிகளும் கட்டி கொடுத்திருந்தால் இன்றைக்கு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது.