கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு, தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !

Share it if you like it

தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றக் கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கிராமங்களில் சட்ட ஒழுங்கு பராமரிப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை தடுத்து வருகிறோம் என்றும், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை 12,500 கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பத்து விஏஓ பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார். மேலும் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி, சட்டவிரோத மணல் கடத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் சக்திவேல், பாஸ்கரன், அவர்களுடன் வந்த 2 பேர், லாரி டிரைவர், அதன் உரிமையாளர் என 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும தலைமறைவான 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எனவே கொலை செய்யப்பட்ட பின்பு இழப்பீடு வழங்குவதால் எந்த பயனும் இல்லை. மருத்துவர்-மருத்துவமனை தாக்குதலை தடுக்க சட்டம் இயற்றியது போல VAO பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கு (அக்.18) விசாரணைக்கு வந்த போது கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கத்தின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Share it if you like it