கணியன் பூங்குன்றனார் பெயருக்கு புது விளக்கம் தந்த சீமான்!

கணியன் பூங்குன்றனார் பெயருக்கு புது விளக்கம் தந்த சீமான்!

Share it if you like it

கனியன் பூங்குன்றனார் பெயருக்கு சீமான் புது விளக்கம் கொடுத்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கணியன் பூங்குன்றனார் சங்ககாலப் புலவர். இவர், பாடிய இரண்டு பாடல்கள் எட்டுத்தொகை நூல்களான நற்றிணையிலும், புறநானூற்றிலும் உள்ளன. இவரது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொன்மொழி இன்றளவும் பெயர் பெற்று விளங்குகிறது. கணியன் பூங்குன்றனார் என்ற பெயர் தொழிலாலும், ஊராலும் வந்தது என ஆன்றோர்கள் கூறுகின்றனர். இவர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள மகிபாலன்பட்டியில் பிறந்தவர் என்று சொல்லப்படுகிறது.

மகிபாலன்பட்டியில் அமைந்துள்ள கோவில் கல்வெட்டுக்கள் இவ்வூரை ’பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ என்று தெரிவிக்கிறது. ஆகவே, இவர் ‘கணியன் பூங்குன்றன்’ என்று அழைக்கப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கனியன் பூங்குற்றனாரின் பெயர் எப்படி? வந்தது என்று புது விளக்கம் கொடுத்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it