பிரபல நடிகை விஜயலட்சுமி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானால் பாதிக்கப்பட்ட நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட காணொளி ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
இந்த காணொளியை பார்த்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். பெங்களூரில், நானும் எனது அக்காவும் சிறையில் இருப்பது போல வாடிக் கொண்டு இருக்கிறோம். சினிமாவில், மொழி அரசியல் கலந்து விட்டது. இதன்காரணமாக, சினிமா வாய்ப்பு இல்லாமல் நான் ரொம்ப கஷ்டபடுகிறேன். சென்னை வருவதற்கு முன்பு, எனது அக்கா இதே மாதிரி தான் பக்கவாத நோயினால் அவதிபடுகிறார். நீண்ட தூரம் அவரால் பயணம் மேற்கொள்ள முடியாது. எனவே, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க எனக்கு ஏற்பாடு செய்து கொடுங்க என்று தி.மு.க. தரப்பிடம் கெஞ்சி கேட்டேன். எனினும், யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை.
எப்படியோ? கஷ்டப்பட்டு எனது அக்காவை பெங்களூர் கூட்டி வந்து விட்டேன். ஆனாலும், இன்றுவரை நான் மிகுந்த துன்பத்தை அனுபவித்து வருகிறேன். தமிழ் பெண்ணான என்னை சீமான் ஆட்கள் தமிழகத்தில் வாழ விடவில்லை. தயவு செய்து தமிழக முதல்வர் எனக்கு உதவ வேண்டும். ஸ்டாலின் சார் ஸ்ரீமதி அம்மாவை பார்க்கிறார். பிரியாவின் குடும்பத்தை சந்திக்கிறார்.
விஜயலட்சுமியான எனக்கு உதவி செய்ய வேண்டும் என ஸ்டாலினிடம் யாரும் கேட்கவில்லை. சீமான் அப்பா இறந்து போனதற்கு, நாங்க இருக்கோம் கவலை வேண்டாம் என ஸ்டாலின் கூறுகிறார். கர்நாடகாவில் எனது அம்மாவை இழந்து தவித்த போது, எனது அக்கா இப்படி இருக்கும் போது, நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று காணொளி வெளியிட்ட பின்பும் கூட சீமானுக்காக அப்படியே கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தி.மு.க.வை சேர்ந்த ஒருவரிடம் நான் பேசினேன். அப்போது, அவர் முன்பு மாதிரி சீமான் தி.மு.க.வை எதிர்ப்பது இல்லை. அவர், பா.ஜ.க.வை மட்டும்தான் இப்போது விமர்சிக்கிறார் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இதனால், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பிகள் கலக்கத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.