நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கால் பந்தாட்ட வீரர் மரடோனா குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ( மறைந்த ) மரடோனா. இவர், குறித்து தனது கட்சி தொண்டர்களிடம் காணொளி வாயிலாக பேசும் போது சீமான் இவ்வாறு கூறினார் ;
கால்பந்தாட்ட வீரர் மரடோனா ஒருமுறை கேரளாவிற்கு வருகிறார். அவன், என்னை போன்றே சேகுவேரா மீது பற்றாளன். சேகுவேரா, அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என்பதால், மரடோனா அவரது படத்தை தனது தோல் பட்டையில் பச்சை குத்தி இருக்கிறார். கால்பந்தாட்ட பயிற்சி கொடுக்க அவர் கேரளாவிற்கு வருகிறார். அப்போது, ஊடகவியலாளர்கள் அவரிடம் பேட்டியெடுத்தனர். ஒரு சின்ன பயனுக்கு என்னுடைய தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. நான், சேகுவேராவின் உடையை அணிந்து கொண்டு அலைந்தேன். அந்த தாக்கத்தில், ஜீனியர் விகடனில் பணிபுரியும் அந்த பையன் சேகுவேராவின் உடையுடன் மரடோனாவை சந்திக்க சென்று இருக்கிறான்.
அந்த பயனை பார்த்து விட்ட மரடோனா, உனக்கு வேண்டுமானால் நான் பேட்டி தருகிறேன் என்று அவனை மட்டும் கூப்பிட்டு இருக்கிறார். மற்றவர்களுக்கு, அவர் பேட்டியளிக்க மறுத்து விட்டார். அந்த பயன் அவரிடம் கேட்டான். உங்களுக்கு, ஆங்கிலம் தெரியாதே அவமானமாக இல்லையா?. இதைகேட்ட, மரடோனா சத்தமாக சிரித்து இருக்கிறார். அடுத்தவன், மொழி எனக்கு தெரியவில்லை என்றால் எனக்கு என்னடா அவமானம்? என் தாய் மொழி தெரியவில்லை என்றால் தான் எனக்கு அவமானம் என்று கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். இந்த காணொளிதான் தற்போது வைராகி வருகிறது.
ஜீனியர் விகடனை சேர்ந்த தம்பி உங்களுக்கு ஆங்கிலம் தெரியாதே? என்று எந்த மொழியில் மரடோனாவிடம் கேட்டியிருப்பார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
கத்தாரில் நேற்றைய தினம் நடந்து முடிந்த உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.