தமிழக அரசின் பால் விலை உயர்வுக்கு நம்மிடம் பால் மாடுகள் இல்லை என சீமான் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தி.மு.க.வின் பி.டீமாக செயல்பட்டு வருகிறார் என்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு அரசியல் நோக்கர்கள் சீமான் கருத்தை மேற்கோள் காட்டி தொடர்ந்து பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பத்திரிகையாளர்களை அண்மையில் சீமான் சந்தித்து இருக்கிறார். அப்போது, தமிழக அரசு பால் விலையை உயர்த்தியது குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் கூறியதாவது ;
பால்விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது சிலர் குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள். பால் என்பது மத்திய அரசு உடையது அல்ல. மாநில அரசு உடையது. பால் விலை ஏற்றத்திற்கு காரணம் நம்மிடம் பால் மாடுகள் இல்லை. நமக்கு ஆந்திராவில் இருந்து பால் வருகிறது. அவர்கள் எல்லாம் தனியார் முதலாளி. அவர்கள் பால் விலையை ஏற்றும் போது இங்கு விலை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பால் விலையை உயர்த்திய தமிழக அரசு மீது குற்றச்சாட்டினை முன் வைக்காமல். பால் மாடுகள் மீது குற்றம் சுமத்தி இருக்கும் சீமானின் அறிவுத்திறனை நினைத்து தம்பி, தங்கைகள் பெருமைபட வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.