அண்ணே..!! அது ஆம்பள புள்ள..!

அண்ணே..!! அது ஆம்பள புள்ள..!

Share it if you like it

ஆண் குழந்தைக்கு பெண் குழந்தையின் பெயரை சூட்டிய சீமான். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, நிர்வாகி ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் படி சீமானிடம் வலியுறுத்தி இருக்கிறார். இதையடுத்து, அக்குழந்தைக்கு வெண்ணிலா என்று பெயர் வைப்பதாக சீமான் அறிவித்தார். அப்போது, சீமான் அருகில் வந்த ஒருவர் அது ஆண் குழந்தை என்று கூறியிருக்கிறார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு வெற்றிவேந்தன் என பெயர் சூட்டினார். இந்த காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அண்மையில் தேர்தல் நடைபெற்றது. அத்தொகுதியில், காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். கூட்டணி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்டத்திற்கு வந்திருந்த பெண்மணியின் குழந்தைக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்த பெயர் இன்றுவரை பேசுப்பொருளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it