மச்சானுக்கு சீட்டு: இது வாரிசு அரசியல் அல்ல – சீமான் புது விளக்கம்!

மச்சானுக்கு சீட்டு: இது வாரிசு அரசியல் அல்ல – சீமான் புது விளக்கம்!

Share it if you like it

தனது மச்சானுக்கு சீட்டு கொடுத்தது வாரிசு அரசியலில் வராது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்ய கூடியவர். இதுதவிர, வாரிசு அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மறைந்த முன்னாள் அமைச்சருமான கக்கனின் 41 -ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அந்தவகையில், அவரது திருவுருவ படத்திற்கு தனது கட்சி தொண்டர்களுடன் மலர்தூவி சீமான் மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் வாரிசு அரசியலை மிக கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது, கரிகாலன் எனும் நிருபர் நீங்கள் உங்கள் உறவினர் அருள்மொழிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தீர்களே அதுபற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்டார். இதனால், கடுப்பான சீமான் நிருபரை விமர்சனம் செய்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it