நான் ஒரு சர்வதேச பயங்கரவாதி என கடந்த ஆண்டு சீமான் கூறியிருந்தார். இந்த நிலையில், விமானத்தில் புகுந்து நான் ரகளை செய்வேன் என அவர் பேசிய காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவரது, பேச்சுக்கள் அனைத்தும் பிரிவினையை தூண்டும் விதமாகவும், தேசத்திற்கு விரோதமாகவும் இன்று வரை இருந்து வருகிறது. அந்த வகையில், இவர் அளந்து விடும் பொய்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் ஒரு முடிவே இல்லை என்றே சொல்லலாம். இப்படிப்பட்ட சூழலில், கடந்த ஆண்டு இவர் பேசிய காணொளி ஒன்று பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்த பொதுக் கூட்டத்தில் சீமான் இவ்வாறு பேசினார்; சென்னை விமான நிலையத்தில் பணி செய்யும் அதிகாரிகளில் 90% சதவீதம் பேர் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள். யார்? வந்தாலும் அடையாள அட்டையை காட்டு என கேட்கிறார்கள். டேய், நான் சர்வதேச தீவிரவாதி டா என்னிடமா ஐ.டி கார்டு கேட்கிறே என திமிருடன் பேசியிருந்தார். ஒரு அடி கூட வாங்காமல் தன்னை ஒரு தீவிரவாதி என்று ஒப்புக் கொண்ட சீமானை என்.ஐ.ஏ. அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், சீமான் பேசிய காணொளி ஒன்று மீண்டும் பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சீமானும், அவரது ஆதரவாளர்களும் விமானத்தில் ஏறிகொள்வார்களாம். விமானம் எடுக்கும் போகும் போது தமிழில் அறிவிப்பு வெளியிடு என்று சொல்வார்களாம். இதுபோல, இரண்டு முறை செய்தால் தான் சரிப்பட்டு வரும் என அக்காணொளியில் சீமான் பேசியிருக்கிறார். முன்பு தன்னை ஒரு தீவிரவாதி என்று கூறியிருந்தார். இன்று விமானத்தில் ஏறி ரகளை செய்வேன் என்று பேசியிருக்கிறார். தொடர்ந்து இதுபோன்று பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.