சீமான் மட்டுமல்ல அவரது குடும்பமே கிறிஸ்தவ குடும்பம் தான் என அவரது நெருங்கிய கூட்டாளியும் இயக்குனருமான களஞ்சியம் பிரபல ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து இருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், தமிழர், தமிழ்தேசியம் குறித்து மேடைகள் தோறும் தொடர்ந்து பேச கூடியவர். இதுதவிர, ஹிந்துமத கடவுள்களையும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை மிக கடுமையாக விமர்சனம் செய்ய கூடியவர். அந்த வகையில், தமிழ் கடவுள் முருகனை தீவிரவாதி எனவும், பார்வதி தேவியை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் கடந்த காலங்களில் மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதனை தொடர்ந்து, தமிழர்களால் மிகவும் உச்சத்தில் வைத்து வணங்கப்படும் ராஜ ராஜ சோழனை பொம்பள பொறுக்கி என்று பொதுக்கூட்டம் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவருவக்கதக்க வகையில் பேசியிருந்தார்.
அதேபோல, தீவிர இறைபக்தி மிக்க தேச தலைவர்களின் அடையாளங்களை தொடர்ந்து மறைத்து வருகிறார். அந்த வகையில், மகாகவி பாரதியாரின் நெற்றியில் இருந்த வீர திலகத்தை மறைத்து விட்டு அவரது புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதேபோல, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகைப்படத்திற்கும் மரியாதை செலுத்தி இருந்தார். இப்படியாக, வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம், ஹிந்து கடவுள்களையும், ஹிந்து தலைவர்களின் அடையாளங்களையும் சீமான் தொடர்ந்து மறைத்து வருவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில், சீமானின் மிக நெருங்கிய கூட்டாளியும், நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளருமாக இருப்பவர் திரைப்பட இயக்குனர் களஞ்சியம். இவரிடம், பிரபல ஊடகமான சத்தியம் டிவி நேருக்கு நேர் என்ற ஊடக விவாதத்தை அண்மையில் நடத்தியிருந்தது. அப்போது, ஊடக நெறியாளர் முக்தார் அஹமத், சீமான் கிறிஸ்தவரா? என்று கேட்டார். அதற்கு, திரைப்பட இயக்குனர் களஞ்சியம், சீமான் அவரது மனைவி மற்றும் ஒட்டு மொத்த குடும்பமே கிறிஸ்தவ குடும்பம் தான் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களிடம் தாம் பின்பற்றும் உண்மையான மதத்தை மறைத்து விட்டு தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தி வருவதன் மூலம் சீமானின் உண்மை முகம் நாட்டு மக்களுக்கு தற்போது தெரிந்து விட்டது. தேசத்திற்கு எதிராகவும், தொடர்ந்து பிரிவினைக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் சீமான் அந்நிய சக்திகளின் கைக்கூலி என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
